search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரதமர் நரேந்திர மோடி"

    இருநாள் பயணமாக ஜப்பான் செல்லும் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தனது பங்களாவில் விருந்து அளிக்கிறார் அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபே. #Modi #ShinzoAbe
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசுமுறை பயணமாக வரும் 28 மற்று ம் 29ம் தேதிகளில் ஜப்பான் செல்ல உள்ளார்.

    இரண்டு நாள் அரசு முறை பயணமாக செல்லும் பிரதமர் மோடிக்கு, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, தனது பங்களாவில் விருந்தளிக்க உள்ளார்.

    முதல் நாளான 28-ம் தேதி பிரதமர் மோடி யாமனாஷி நகருக்கு செல்கிறார். அங்கு இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். 



    மறுநாள் 29-ம் தேதி டோக்கியோவில் நடக்கும் சந்திப்பில் இருதரப்பு உறவுகள் உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடியும், பிரதமர் ஷின்சோ அபேவும் விவாதிக்க உள்ளனர். அங்குள்ள 'ரோபோ' தயாரிப்பு மையத்துக்கு சென்று, மோடி பார்வையிடுகிறார்.

    மேலும், ஜப்பான் செல்லும் பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பிரதமர் அபேயின் தனிப்பட்ட சொகுசு பங்களாவில் விருந்தளிக்க உள்ளார்.

    ஷின்சோ அபே தனது சொகுசு பங்களாவுக்கு வரும்படி வெளிநாட்டுத் தலைவர் ஒருவருக்கு அழைப்பு விடுப்பதும், விருந்து அளிப்பதும் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. #Modi #ShinzoAbe
    இன்று செய்தியாளர்களை சந்தித்த பிரவீன் தொகாடியா, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு கோரிக்கைகள் விடுவதற்கு பதிலாக ஆர்.எஸ்.எஸ் தலைவர் பிரதமருக்கு ஆணையிட்டு இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். #PMModi #AyodhyaRamTempleIssue #PravinTogadia #RSS
    மும்பை:

    விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் தலைவர் பிரவீன் தொகாடியா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்து ராஜ்ஜியம் என்பது இஸ்லாமியர்களுக்கு இடமில்லை என்பது பொருள் அல்ல என்ற பகவத்தின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    பசுக்களை கொல்பவர்களையும், பாகிஸ்தான் கொடியேந்தி காஷ்மீரில் இருப்பது போன்ற இஸ்லாமியர்கள் இல்லாததே இந்து ராஜ்ஜியம் என தெரிவித்துள்ளார். மேலும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் தற்போது குற்றம்சாட்டியுள்ளார்.



    அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என பிரதமர் ஏமாற்றிவிட்டதாக குறிப்பிட்ட தொகாடியா, எஸ்.சி., எஸ்.டி. சட்டப்பிரிவு வந்தபோது அதில் முடிவு எடுக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை எனக்கூறிய பிரதமர் மோடி, அயோத்தி விவகாரத்தில் நீதிமன்றத்தின் முடிவே இறுதியானது என கூறுகிறார் எனவும் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து பேசிய பிரவீன் தொகாடியா, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக கோரிக்கைகளை விடுப்பதற்கு பதிலாக பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆர்.எஸ்.எஸ் தலைவர் உத்தரவிட்டு இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். #PMModi #AyodhyaRamTempleIssue #PravinTogadia #RSS
    பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 8-ந் தேதி (திங்கட்கிழமை) டெல்லி செல்கிறார். #EdappadiPalaniswami #NarendraModi #Delhi
    சென்னை:

    பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 8-ந் தேதி (திங்கட்கிழமை) டெல்லி செல்கிறார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் சமயத்தில் செல்வதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க அனுமதி கேட்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் (செப்டம்பர்) 30-ந் தேதி பிரதமர் அலுவலகத்தில் கடிதம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், வரும் 8-ந் தேதி பிரதமரை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. இந்தத் தகவலை சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நேற்று உறுதிப்படுத்தினார்.



    8-ந் தேதி டெல்லி செல்லும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் உயர் அதிகாரிகள் செல்ல இருக்கின்றனர். பிரதமர் நரேந்திர மோடியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கும்போது, தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து கோரிக்கை மனு அளிப்பார் என்று தெரிகிறது.

    குறிப்பாக, மதுரை தோப்பூரில் அமைய இருக்கும் எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் மத்திய மந்திரி சபையின் ஒப்புதலை விரைவாக வழங்குமாறு கோரிக்கை விடுப்பார் என தெரிகிறது. மேலும், அரசியல் தொடர்பாகவும் இந்த சந்திப்பு இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கூட்டணி குறித்தும் முக்கியமாக பேசப்படும் என்று தெரிகிறது.

    ஏனென்றால், தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. நாடாளுமன்ற தேர்தலுக்கு இப்போதே தயாராகிவருகிறது. கூட்டணி கணக்கை எல்லாம் முடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

    எனவே, நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்கு அச்சாரமாக நரேந்திர மோடி-எடப்பாடி பழனிசாமி சந்திப்பு இருக்கும் என்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.  #EdappadiPalaniswami #NarendraModi #Delhi
    டெல்லியில் சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்துக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டி, சிறப்புரையாற்றினார். #PMNarendraModi #IICC #Delhi
    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள துவாரகா பகுதியில் அமையவுள்ள சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்துக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். இந்த அடிக்கல் நாட்டு விழாவில் அரசு அதிகாரிகளும், அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

    புதிதாக அமையவுள்ள இந்த மையத்தில் மாநாட்டுக்கான அரங்கம், கண்காட்சி அரங்கம், ஆலோசனைக்கூடம், விடுதிகள், சந்தை மற்றும் பணியாளர்களுக்கான அலுவலகம் ஆகிய அனைத்தும் ஒரே சுற்றுவட்ட எல்லைக்குள் அமையவுள்ளது.



    அடிக்கல் நாட்டு விழாவைத்தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, இந்த திட்டத்துக்கான மதிப்பு 26 ஆயிரம் கோடி ரூபாய் என தெரிவித்தார். மேலும், 80 கோடி இளைஞர்களின் ஆற்றல் மற்றும் திறனுக்காக இந்த மையம் அமைக்கப்படுவதாகவும், இது மாநாடு மற்றும் கண்காட்சி மையம் மட்டுமன்றி, சர்வதேச தொழில் மையமாகவும் விளங்கும் எனவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

    இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி, தவுலா கவுன் என்ற இடத்தில் இருந்து துவாரகா வரையில் மெட்ரோ ரெயில் மூலம் பயணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #PMNarendraModi #IICC #Delhi
    கடந்த 2014 தேர்தலை விட வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறுவோம் என்று பிரதமர் மோடி கூறினார். #Parliamentelection #PMModi


    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    ஒருவருக்கொருவர் அவநம்பிக்கை கொண்ட எதிர்க்கட்சிகள் எல்லாம் சேர்ந்து மெகா கூட்டணி அமைக்க முயற்சித்து வருகின்றன.

    ஏற்கனவே அரசியல் நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் இது போன்ற கூட்டணிகள் அமைந்து அவை தோல்வியில் முடிந்துள்ளன.

    இந்த கசப்பான அனுபவங்களை ஏற்கனவே மக்கள் பெற்று இருக்கிறார்கள். எனவே, மோடியை வெளியேற்ற வேண்டும் என்ற திட்டத்தில் அவர்கள் ஒன்று சேர்வதை மக்கள் புறக்கணிப்பார்கள்.

    எதிர்க்கட்சிகள் அமைக்கும் மெகா கூட்டணி மக்களிடம் எடுபடாது. அந்த கூட்டணி என்பது தோல்வி திட்டம். இதன் மூலம் அவர்கள் மக்களோடு கூட்டணியை ஏற்படுத்த முடியாது.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் எங்களின் கொள்கை வளர்ச்சி, விரைவான வளர்ச்சி, அனைவருக்கும் வளர்ச்சி என்பதாக இருக்கும்.

    நாங்கள் கடந்த 2014 பாராளுமன்ற தேர்தலை விட வரும் தேர்தலில் இன்னும் கூடுதல் இடங்களை கைப்பற்றுவோம். பா.ஜனதா கூட்டணியில் இதுவரை பெற்ற இடங்களை விட அதிக இடங்களை பெற்று பழைய எங்கள் சாதனைகளை முறியடிப்போம்.

    இந்தியாவில் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டு வெளிநாடுகளுக்கு தப்பி ஓடுபவர்களுக்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இதற்காக புதிய சட்டத்தையும் கொண்டு வந்துள்ளோம். இந்த சட்டத்தின் மூலம் இனி பொருளாதார குற்றங்களை செய்து மக்கள் பணத்தை கொள்ளையடிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் பாயும்.

    ரபேல் போர் விமானம் கொள்முதல் தொடர்பாக திட்டமிட்ட பொய் பிரசாரங்களை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து செய்து வருகின்றன. இது, இந்திய அரசும், வெளிநாட்டு அரசும் நேரடியாக போட்ட ஒப்பந்தம்.

    வெளிப்படை தன்மையுடனும், நேர்மையுடனும் இந்த ஒப்பந்தம் போடப்பட்டது. எதிர்க்கட்சிகள் தவறான பிரசாரம் செய்வது நாட்டின் நலனுக்கு குந்தகத்தை ஏற்படுத்தும்.

    எங்கள் அரசு ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கி உள்ளது. 2017 செப்டம்பர் மாதத்தில் இருந்து 2018 ஏப்ரல் மாதம் வரை மட்டுமே 45 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கி இருக்கிறோம்.

    கடந்த ஆண்டில் மட்டும் 70 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கி இருப்பதாக தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

    சுற்றுலா, முத்ரா கடன் திட்டம் போன்றவற்றின் மூலம் ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

    தனி நபர்களை கும்பலாக அடித்து கொல்வது, பசுவதை விவகாரத்தில் மனிதர்களை கொல்வது போன்ற சம்பவங்கள் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.

    எங்கள் அரசு இதில் கடுமையான சட்டங்களையும், விதிமுறைகளையும் கொண்டு வருவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

    ஒவ்வொரு தனி மனிதனுக்கும், சுதந்திரமும், பாதுகாப்பும் இருக்க வேண்டும். எந்தவொரு சூழ்நிலையிலும் மக்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்து கொள்ளக்கூடாது. இந்த விவகாரங்களில் நாங்கள் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

    அசாம் தேசிய குடியுரிமை பதிவேடு விவகாரம் என்பது நாங்கள் கொடுத்த வாக்குறுதியை இப்போது நிறைவேற்றி இருக்கிறோம்.

    1972 மற்றும் 1982-ல் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் குடியுரிமை பதிவேடு தயாரிக்கப்பட்டது.



    ஆனால், இப்போது இதை வைத்து காங்கிரஸ் கட்சி வாக்கு வங்கி அரசியல் நடத்துகிறது. தவறான குற்றச்சாட்டுகளை அவர்கள் கூறுகிறார்கள்.

    இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். #Parliamentelection #PMModi

    உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த 5 பழங்குடியின மாணவர்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்து பாராட்டினார். #PMModi
    புதுடெல்லி:

    மகாராஷ்டிரா மாநிலம் சந்திராபூர் மாவட்டத்தில் உள்ள ஆஷரம்ஷாலாஸ் பள்ளியைச் சேர்ந்த 10 மாணவர்கள் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முயற்சியில் ஈடுபட்டனர். கடந்த ஏப்ரல் மாதம் 11-ம் தேதி சிகரத்தில் ஏற தொடங்கினர். ஆனால் அவர்களில் 5 மாணவர்கள் மட்டுமே எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக அடைந்தனர். மீதி 5 மாணவர்களால் பயணத்தை முடிக்க முடியவில்லை.

    இதையடுத்து, எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த உமாகந்த் மகாவி, பர்மேஷ் அலே, மனிஷா துர்வே, கவிதாஸ் காத்மோட் மற்றும் விகாஸ் சோயம் ஆகிய 5 மாணவர்களுக்கு 25 லட்சம் ரூபாய் மற்றும் காவல்துறையில் பணி வழங்கப்படும் என மாநில நிதி மந்திரி சுந்தீர் முகந்திவார் தெரிவித்தார். மற்ற 5 மாணவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார்.



    இந்நிலையில், எவரெஸ்ட்டில் ஏறி சாதனை படைத்த மாணவர்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, மகாராஷ்டிரா மாநில முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் மாநில உள்துறை மந்திரி ஹன்ஸ்ராஜ் அஹிர் ஆகியோர் உடனிருந்தனர்.  #PMModi
    ஆமதாபாத்தில் இருந்து மும்பைக்கு இடையேயான புல்லட் ரெயில் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணிக்கு குஜராத் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். #BulletTrain #farmersprotest #NarendraModi
    ஆமதாபாத்:

    குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து மராட்டிய மாநிலம் மும்பைக்கு புல்லட் ரெயில் திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் அடிக்கல் நாட்டினார். ஜப்பான் நாட்டின் நிதி உதவியுடன் தயாராகும் இந்த திட்டம் 2023-ம் ஆண்டு நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது.

    இதற்காக குஜராத் மாநிலத்தில் 8 மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தும் பணியை அதிகாரிகள் தொடங்கினர். வல்சாத் மாவட்டம் வகல்தாரா என்ற கிராமத்தில் நிலத்தை கையகப்படுத்த நில அளவீடு பணிக்காக அதிகாரிகள் நேற்று சென்றனர். ஆனால் இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதேபோல் சாரோன் கிராமம் உள்ளிட்ட பல இடங்களில் நில அளவீடு பணிக்கு வந்த அதிகாரிகளை பணி செய்ய விடாமல் விவசாயிகள் தடுத்தனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில், நிலம் கையகப்படுத்துவது குறித்து எங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை. மேலும் குஜராத் மாநில சட்டப்படி, வளமான நிலத்துக்கு குறைவான நஷ்டஈடு தந்தால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். எனவே மத்திய அரசின் சட்டப்படி நிலம் கையகப்படுத்துவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். ஆமதாபாத்:

    குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து மராட்டிய மாநிலம் மும்பைக்கு புல்லட் ரெயில் திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் அடிக்கல் நாட்டினார். ஜப்பான் நாட்டின் நிதி உதவியுடன் தயாராகும் இந்த திட்டம் 2023-ம் ஆண்டு நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது.

    இதற்காக குஜராத் மாநிலத்தில் 8 மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தும் பணியை அதிகாரிகள் தொடங்கினர். வல்சாத் மாவட்டம் வகல்தாரா என்ற கிராமத்தில் நிலத்தை கையகப்படுத்த நில அளவீடு பணிக்காக அதிகாரிகள் நேற்று சென்றனர். ஆனால் இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதேபோல் சாரோன் கிராமம் உள்ளிட்ட பல இடங்களில் நில அளவீடு பணிக்கு வந்த அதிகாரிகளை பணி செய்ய விடாமல் விவசாயிகள் தடுத்தனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில், நிலம் கையகப்படுத்துவது குறித்து எங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை. மேலும் குஜராத் மாநில சட்டப்படி, வளமான நிலத்துக்கு குறைவான நஷ்டஈடு தந்தால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். எனவே மத்திய அரசின் சட்டப்படி நிலம் கையகப்படுத்துவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். ஆமதாபாத்:

    குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து மராட்டிய மாநிலம் மும்பைக்கு புல்லட் ரெயில் திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் அடிக்கல் நாட்டினார். ஜப்பான் நாட்டின் நிதி உதவியுடன் தயாராகும் இந்த திட்டம் 2023-ம் ஆண்டு நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது.

    இதற்காக குஜராத் மாநிலத்தில் 8 மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தும் பணியை அதிகாரிகள் தொடங்கினர். வல்சாத் மாவட்டம் வகல்தாரா என்ற கிராமத்தில் நிலத்தை கையகப்படுத்த நில அளவீடு பணிக்காக அதிகாரிகள் நேற்று சென்றனர். ஆனால் இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதேபோல் சாரோன் கிராமம் உள்ளிட்ட பல இடங்களில் நில அளவீடு பணிக்கு வந்த அதிகாரிகளை பணி செய்ய விடாமல் விவசாயிகள் தடுத்தனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில், நிலம் கையகப்படுத்துவது குறித்து எங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை. மேலும் குஜராத் மாநில சட்டப்படி, வளமான நிலத்துக்கு குறைவான நஷ்டஈடு தந்தால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். எனவே மத்திய அரசின் சட்டப்படி நிலம் கையகப்படுத்துவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். #BulletTrain #farmersprotest #NarendraModi
    பிரதமர் நரேந்திர மோடி திருமணம் ஆகாதவர் என்று மத்திய பிரதேச மாநில கவர்னர் ஆனந்தி பென் பட்டேல் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. #PMModi
    போபால்:

    நரேந்திர மோடி குஜராத் முதல்-மந்திரியாக இருந்து பின்னர் பிரதமர் ஆனார். அவர், முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகியதும் ஆனந்தி பென் பட்டேல் முதல்-மந்திரியாக நியமிக்கப்பட்டார்.

    அவர், தற்போது மத்திய பிரதேச மாநில கவர்னராக இருந்து வருகிறார். அங்குள்ள கர்தா மாவட்டத்தில் அவர் சுற்றுப்பயணம் செய்தார்.

    திமாரி என்ற இடத்தில் அங்கன்வாடி நிகழ்ச்சி ஒன்றில் கவர்னர் ஆனந்தி பென் பட்டேல் கலந்து கொண்டு அங்கன்வாடி ஊழியர்கள் மத்தியில் பேசினார்.

    அப்போது பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகள் குறித்து புகழ்ந்து பேசிய ஆனந்தி பென் பட்டேல், நரேந்திர மோடி திருமணம் ஆகாதவர் என்று கூறினார்.

    அவர், தனது பேச்சில் நரேந்திர மோடி திருமணம் ஆகாதவர் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். அவர் திருமணம் ஆகாதவர் என்றாலும் கூட பெண்கள் மற்றும் குழந்தைகள் பிரச்சனைகள் குறித்து நன்றாக அறிந்தவர்.

    குழந்தைகள் பிறப்பதற்கு முன்பும், பிறந்த பிறகும் ஏற்படும் பிரச்சனைகள் பற்றியும் தெரிந்தவர் என்று குறிப்பிட்டார்.


    பிரதமர் மோடி ஜசோதா பென் என்பவரை இளம் வயதில் திருமணம் செய்திருந்தார். ஆனால், திருமணமான குறுகிய காலத்திலேயே அவர்கள் பிரிந்து வாழ்ந்தனர்.

    மோடி திருமணம் ஆகாதவர் என்றே முதலில் கருதப்பட்டது. 2014 பாராளுமன்ற தேர்தலின் போது கூட வேட்பு மனுவில் ஜசோதா பென் தனது மனைவி என்று குறிப்பிட்டு இருந்தார்.

    ஆனால், ஆனந்தி பென் பட்டேல் நரேந்திர மோடி திருமணம் ஆகாதவர் என்று குறிப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் பேசியவற்றை செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். #PMModi
    பிரதமர் நரேந்திர மோடியின் கடன் அபாயம் குறித்த உரையை அமெரிக்க ராணுவ மந்திரி ஜேம்ஸ் மேட்டிஸ் வெகுவாக பாராட்டி உள்ளார்.
    வாஷிங்டன்:

    சிங்கப்பூரில் கடந்த வாரம் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அங்கு நடந்த 17-வது ஆசிய பாதுகாப்பு மாநாட்டில் பேசினார். அப்போது அவர், சில நாடுகள் மற்ற நாடுகளுக்கு அதிக அளவில் கடன் கொடுத்து பெரும் சுமையை ஏற்றி வைப்பதாக விமர்சித்தார். அதற்கு பதிலாக, அந்த நாடுகளை வளர்த்து விட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

    இந்த மாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க ராணுவ மந்திரி ஜேம்ஸ் மேட்டிஸ், பிரதமரின் இந்த உரையை தற்போது வெகுவாக பாராட்டி உள்ளார். இது குறித்து சிங்கப்பூரில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘கடன் பெறுவதன் அபாயம் குறித்து பிரதமர் மோடி மிகவும் நல்ல கருத்தை எடுத்துரைத்தார். இது மிகவும் உண்மை. அத்துடன் புதிய செயல்திட்டத்தை வகுப்பதற்கும் வழிவகுத்து இருக்கிறது’ என்றார்.

    மோடியின் உரையை கேட்டுவிட்டு அறைக்கு சென்ற பின் இரவில் அதைப்பற்றியே நினைத்துக்கொண்டு இருந்ததாக கூறிய ஜேம்ஸ் மேட்டிஸ், இதுபோன்ற கடன்களால் உங்கள் இறையாண்மை மற்றும் சுதந்திரத்தை இழந்துவிடுவீர்கள் என்றும் கூறினார். அந்த உரைக்காக இந்தியாவை (மோடி) நினைவு கூருகிறேன் என்றும், அது மூத்த ஒருவரின் உரையை கேட்பதைப்போல இருந்ததாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். 
    மன் கி பாத் வானொலி உரையில் இன்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக பேசிய பிரதமர் மோடி, பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை மக்கள் கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். #Mannkibaat #PMModi #shunplastic
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மன் கி பாத்’ என்னும் நிகழ்ச்சியின் மூலம் வானொலி வழியாக நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார்.

    இன்றைய உரையில்சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக பேசிய பிரதமர் மோடி, பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை மக்கள் கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.  

    உலகச் சுற்றுச்சூழல் தினமான ஜுன் ஐந்தாம் தேதியை அனைவரும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என தெரிவித்த மோடி, செடிகளை நடுவது மட்டும் போதாது, அது மரமாக வளரும்வரை நாம் அக்கறை செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

    கடுமையான வெயில், அளவில்லாத மழை, வெள்ளம் மற்றும் அதிகமான குளிரால் பாதிக்கப்படும்போது அனைவருமே நிபுணர்களாக மாறி புவி வெப்பமயமாதலைப் பற்றியும், பருவநிலை மாற்றத்தை பற்றியும் பேசுகிறோம்.

    ஆனால், வெற்றுப் பேச்சுகளால் இந்த பிரச்சனைகளுக்கு ஏதாவது தீர்வு உண்டா? சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், இயற்கைச் சூழலை பராமரிக்கவும் தேவையான அக்கறை நமக்குள் உருவாக வேண்டும். இந்த ஆண்டின் சுற்றுச்சூழல் தினத்தை முன்னின்று நடத்துவதில் இந்தியா பெருமிதம் கொள்கிறது.

    பிளாஸ்டிக்கால் ஏற்படும் மாசுப்பாட்டை ஒழிப்பது இந்த ஆண்டு சுற்றுச்சூழல் தினத்துக்கான கருப்பொருளாக முன்வைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த கருப்பொருளின் முக்கியத்துவத்தை உணர்ந்து, மாசு விளைவிக்கும் குறைந்ததரம் கொண்ட பிளாஸ்டிக் பொருட்களையும், பாலிதீனையும் பயன்படுத்த வேண்டாம் என்று வேண்டிக் கொள்கிறேன்.

    பிளாஸ்டிக் பயன்பாடு நமது இயற்கையிலும், வனவிலங்கு வாழ்க்கை முறையிலும், நனது ஆரோக்கியத்திலும் எதிர்விளைவான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார். #Mannkibaat #PMModi #shunplastic
    கர்நாடகாவைத் தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலுக்கு பிரதமர் மோடி அடுத்த மாதமே பா.ஜ.க. சார்பில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். #Parliamentelection #PMModi

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 5 ஆண்டு பதவி காலம் நிறைவு பெறுவதற்கு சரியாக ஓராண்டு உள்ளது.

    கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியை பிடித்தது. அடுத்த தேர்தலுக்கு ஓராண்டு இருந்தாலும் ஏப்ரல் மாதமே ஓட்டுப்பதிவு நடைபெறும் என்பதால் இப்போதே அனைத்துக்கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன.

    மத்தியில் பா.ஜ.க. ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் பிரதமர் நரேந்திர மோடியும், பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷாவும் உறுதியாக உள்ளனர். கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் அவர்கள் இருவரும் சேர்ந்து வகுத்த அதிரடி திட்டங்கள் பா.ஜ.க. வெற்றிக்கு மிகவும் கை கொடுத்தன.

    அதுபோல 2019-ம் ஆண்டு தேர்தலிலும் புதிய வியூகங்களை அவர்கள் இருவரும் வகுக்க உள்ளனர். அவர்களது திட்டத்தின்படி அடுத்த மாதமே (ஜூன்) தேர்தல் பிரசாரத்தை தொடங்க முடிவு செய்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி பா.ஜ.க. சார்பில் முதல் பிரசார கூட்டத்தை நடத்த உள்ளார்.


    பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் மத்தியில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசிக்கு செல்ல உள்ளார். அவருடன் அமித்ஷாவும் செல்கிறார். அங்கு நடக்கும் பிரமாண்ட கூட்டத்தில் மோடியும், அமித்ஷாவும் பேசுகிறார்கள்.

    இது 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான முதல் தேர்தல் பிரசார கூட்டமாக கருதப்படுகிறது. அந்த கூட்டத்தில் பேசி முடித்த பிறகு மோடியும், அமித்ஷாவும் பீகார் மாநிலத்திற்கு சென்று பேச உள்ளனர்.

    இந்த பிரசார கூட்டங்களுக்கு இடையே புதிய நலத்திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க திட்டமிட்டுள்ளார். குறிப்பாக புர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ் வழிதடத்திற்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.

    இதற்கிடையே வருகிற 28-ந்தேதி நடைபெற உள்ள கைரானா, நூர்பூர் தொகுதிகளின் இடைத்தேர்தல் பிரசாரத்திலும் அவர் பங்கேற்க உள்ளார். கர்நாடகாவை தொடர்ந்து பிரதமர் மோடி உத்தரபிரதேசத்தில் பிரசாரம் தொடங்குவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    வாராணாசி தொகுதியில் இருந்து எம்.பி.யாக இருக்கும் பிரதமர் மோடி அடுத்த ஆண்டு தேர்தலிலும் அந்த தொகுதியில் போட்டியிடுவார் என்று தெரிய வந்துள்ளது. இதனால் தனது தேர்தல் பிரசாரத்தை அந்த தொகுதியில் இருந்து அவர் தொடங்குவதாக கூறப்படுகிறது. #Parliamentelection #PMModi

    ×